தங்கம் கூட வாங்கிரலாம் ப்ரோ! தக்காளி வாங்கதான் காசு இல்ல!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலையானது ஏற்ற தாழ்வுடன் இருந்து வருகிறது.

கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளியின் முதல் ரகம் மற்றும் நவீன் தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ கத்தரிக்காய் 35 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், வெங்காயம் 22 ரூபாய்க்கும், முருங்கைகாய் 35 ரூபாய்க்கும், உருளைக்கிளங்கு 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலைவாசியை விடியா திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதால், காய்கறிகளை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் புலம்பி வருகின்றனர்.

Exit mobile version