தக்காளிக்கெல்லாம் காலம் வரும்-னு நாம என்ன கனவா கண்டோம்!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இல்லதரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் கிலோவுக்கு 85 ரூபாய்க்கு விற்பனையானயான தக்காளி இன்று மீண்டும் 15 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 650 டன் தக்காளி வரத்து இருந்த நிலையில் இன்று 550 டன் தக்காளி மட்டுமே இறக்குமதியாகி உள்ளது. மேலும் ஒரு கிலோ கத்தரிக்காய் 45 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 22 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 20 ரூபாய்க்கும் மற்றும் சின்ன வெங்காயம் 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version