பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிய கோயம்பேடு காய்கறி சந்தை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே பகல் வேளையில் பல கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு முழு ஊரடங்கு அமலாகும் நிலையில், இன்று காய்கள் வாங்க மக்கள் அதிகம் வருவார்கள் எனறு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வழக்கமான நாட்களைக் காட்டிலும் கூட்டம் குறைவாக இருப்பதாகவும் வரத்து அதிகரித்து, விலைவாசி குறைவாக இருந்தாலும் விற்பனை  இன்று குறைவாக இருப்பதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

Exit mobile version