சென்னை கோயம்பேடு காய், கனி அங்காடிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கோயம்பேடு காய், கனி அங்காடியில் உணவு பாதுகாபுத்துறை அதிகாரிகள் திடீரென நள்ளிரவு 2 மணிக்கு சோதனை நடத்தினர். 75 கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரசாயன சாயங்கள் பூசப்பட்ட 250 கிலோ பட்டாணி மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையின் போது பல்வேறு கடைகளில் இருந்து சுமார் 10 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.