கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலை அமைப்பதற்காக நடைபெற்று வரும் பூர்வாங்க பணிகளை இந்திய அணுசக்தி கழக அதிகாரிகள் மற்றும் ரஷ்ய அணுசக்தி துறை விஞ்ஞானிகள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் பங்களிப்புடன் தலா 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம், சமீபத்தில் கையெழுத்தானது. இதன் பூர்வாங்க பணிகளை, இந்திய அணுசக்தி துறை தலைவர் கே.என்.வியாஸ், இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.சர்மா, ரஷ்யாவைச் சேர்ந்த லிகாஷேவ் அலெக்சி, லிம்ரன் கோசேவ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.