உலகிலேயே ஒரு சில தீவுகளில் மட்டும் வசிக்கும் அபூர்வ விலங்குகளான கோமுடோ டிராகன்களின் வாழ்வியல் குறித்து தொகுப்பு.
கோமுடோ டிராகன்… பெயரை கேட்கும் போதே அச்சமாக இருக்கிறதா…
தெற்காசிய நாடுகளை தாயகமாக கொண்ட இவ்வினம், தற்போது இந்தோனேஷியாவில் மட்டும் தாக்குப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது..குறிப்பாக Rinca, Flores, Gili Motang தீவுகளில் உள்ளன. ஒரு தனித்தீவையே இந்த உயிரினத்திற்காக ஒதுக்கி அத்தீவை கோமுடோ நேஷ்னல் பார்க்காக பாதுகாத்து வருகிறார்கள்.. 3 மீட்டர் நீளம் வரையிலும், 70 கிலோ எடை வரையிலும் வளரும் இவை 30 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..
இவை 40 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக பார்க்கப்படுகிறது… சூடான பிரதேசங்கள் இவை வாழ ஏற்றவை.. பெரும்பாலும் இறந்த விலங்குகளின் உடல்களை உண்கின்றன.. அரிதாக மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவற்றை வேட்டையாடியும் உண்கின்றன… வாலால் அடித்தும் இரையை நிலைகுலையச் செய்கின்றன.
பொதுவாக இவற்றால் அதிவேகமாக ஓடமுடிவதில்லை… இரை தனது அருகே வரும்போது திடீர் தாக்குதல் நடத்தி நிலைகுலைய வைத்துவிடுகின்றன.
பாம்புகளை போல நாக்கைவெளியே நீட்டி நீட்டி காற்றின் தன்மையை உணர்கின்றன… இறந்த உடல் 10 கி.மீ. க்கு அப்பால் இருந்தாலும் அவற்றை தனது அபார மோப்ப சக்தியால் உணர்ந்து சென்று சாப்பிடுகின்றன.. இவற்றிடம் சிறிய அளவில் விஷத்தன்மை இருப்பதாக கூறப்படுகிறது.. அதோடு கோமுடோ டிராகன்களின் எச்சிலில், உயிரைக்கொல்லும் பாக்டீரியா இருக்கிறது.. டிராகன் கடித்த பின், சரியான சிகிச்சை பெறாவிட்டால், உயிருக்கு பேராபத்தாக முடியும்… டிராகன் தாக்கி பலர் இறந்திருக்கிறார்கள்..
புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்களைக் கூட இவை தோண்டி எடுத்து உண்கின்றன.. ஆகவே அத்தீவுகளில் மனித உடல் மீது பெரிய பெரிய கற்களை போட்டு புதைக்கிறார்கள்… அப்போது தான் கோமுடோ டிராகன்கள் உடல்களை தோண்டி எடுத்து உண்ண முடியாது என்பதால் இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள்.