மீண்டும் முதலிடத்தை பிடித்த கொல்கத்தா!

ஐபிஎல் தொடரின் 21 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 21 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோஸ்பட்லர், ஸ்டீவ் ஸ்மித் இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பட்லர் 37 ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 140 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறாங்கிய கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், சுனில் நரின் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 47 ரன்கள் குவித்த நிலையில் சுனில் நரின் ஆட்டமிழந்த நிலையில், 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த கிறிஸ் லின்னும் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ராபின் உத்தபாவும், சுப்மன் கில்லும் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.

13 புள்ளி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி 140 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணியில் 2 விக்கெட் வீழ்த்திய ஹாரி குர்னி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், கொல்கத்த நைட் ரைடர்ஸ் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

Exit mobile version