சிபிஐ முன்பு ஆஜரானார் கொல்கத்தா காவல் ஆணையர்

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணை குறித்து விளக்கம் அளிக்க சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராகியுள்ளார். சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து ஆரம்பத்தில் மேற்கு வங்க பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றமானது.

இருப்பினும் சாரதா சிட்பண்ட் மோசடி குறித்த முக்கிய ஆதாரங்களை தங்களிடம் ராஜீவ் குமார் ஒப்படைக்கவில்லை என குற்றம்சாட்டிய சிபிஐ அதிகாரிகள், கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமாரை விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றனர். அப்போது சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தர்ணாவில் குதித்ததால் பெரும் பதற்றம் நிலவியது. இந்தநிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணை குறித்து விளக்கம் அளிக்க சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராகியுள்ளார்.

மேகலாய மாநிலம் சில்லாங் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version