கோலாலம்பூருக்கு எடுத்துச்செல்ல முயன்ற 2.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்

கோலாலம்பூருக்கு கடத்த இருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்ர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரை சோதனை செய்ததில் ஆசனவாயில் மறைத்து வெளிநாட்டு பணம் எடுத்த செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வெளிநாட்டு பணம் 2.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சாகுல்ஹமீதுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version