கோஹ்லியை கேலி செய்த முன்னாள் இங்கி. கேப்டன்… கோபத்தில் இந்திய ரசிகர்கள்…

உலககோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியது. தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய இந்திய அணி, அரையிறுதியில் சொதப்பியது. ஆயினும் இந்திய ரசிகர்கள், இந்திய அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியை கடுமையாக கேலி செய்யும் வகையில் தனது இன்ஸ்டாகிரமில் கோஹ்லி படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நீல வண்ண ஆடையுடன் ராஜா வேடத்தில் இருக்கும் கோஹ்லி, தனது வலது கையில் மும்பை air ticket-ம், இடது கையில் பந்தும் வைத்துள்ளார். டிக்கெட்டில் இன்றைய தேதியிட்ட (11.07.2019) கோலியின் பெயர் உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் வாகன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். வாகனின் இந்த செயலுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய ரசிகர்கள் வாகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரது இன்ஸ்டாகிரமில் பதில் அளித்து வருகின்றனர்.

Exit mobile version