கோலி தலைமையிலான இந்தியா அணி உலகக் கோப்பை பயணத்தை இன்று துவங்கவுள்ளது.இன்னும் உலகக் கோப்பையில் ஆட்டத்தை துவங்காத அணி என்றால் அது இந்தியாதான். இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் உள்ளது.தென்னாப்பிரிக்கா இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.முந்தைய உலக கோப்பை போட்டிகளை ஒப்பிடுகையில் தென்னாப்பிரிக்காவை விட இந்தியா மோசமான சாதனையே தன் கைவசம் வைத்துள்ளது.
ஐபில் போட்டியில் அபார பந்துவீச்சில் அனைவரையும் ஈர்த்தவர் பும்ரா இந்த உலகக்கோப்பையில் அவர்மீது எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இவர் பந்துவீசும் முறையிலும், கைகளை விரித்து வீசுவதிலும் பும்ரா மற்ற சர்வதேச பந்துவீச்சாளர்களிடமிருந்து மாறுபட்டவர். 2019 உலகக் கோப்பையில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் அவர்தான். போட்டிகளின் முடிவை மாற்றுவதில் பும்ரா பெரும் பங்கு வகிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி கண்ணிமைக்கும் நொடியில் அவுட் எடுக்கும் வல்லமைபடைத்த டோனியின் பங்களிப்பு இந்த உலகக்கோப்பையில் எப்படியிருக்கும் என்பது அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.அதே போல் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை போட்டியில் களமிறங்குவது இதுவே முதல் முறையாகும்.