கொடைக்கானலில் கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடைவிழா கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கோடைக்கானலில் 10 நாட்கள் நடந்த கோடை விழாவின் கடைசி நாள் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. மலர்க்கண்காட்சி மற்றும் கோடைவிழாவை ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அலுவலர் உமாதேவி, காவல் துறை, வனத்துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன் பரிசுகளை வழங்கினார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.