ஜவ்வாது மலையில் 22 ஆம் ஆண்டு கோடை விழா வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 22 ஆம் ஆண்டு கோடை விழா, வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது. தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர். பின்னர். 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். மலர் வளையங்கள், காய்கறிகளால் ஆன வளைவு தோரணங்கள், மலர்களால் ஆன பறவைகள் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் அரசின் சாதனைகள், வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.