கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி அவமதிக்கப்படவில்லை என, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌதம் காம்பீரை கேப்டனாகக் கொண்டு செயல்பட்ட கொல்கத்தா அணி, கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங் அணியை வென்று, முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐ.பி.எல் 13 வது சீசன் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய முதல் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தங்கள் வெற்றி குறித்து ட்வீட் செய்யும்படி கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டது.
அதில் 2012 ஆம் ஆண்டு கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி, வின்னிங் ஷாட் அடித்து வெற்றிக்கு வழிவகுத்த மனோஜ் திவாரி Tag செய்யப்படாததால், அவர் அதிருப்தி அடைந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அந்த ட்வீட் அவரை அவமதிப்பது போல் உள்ளதாகவும், அந்த ட்வீட் அவருக்கு ஏமாற்றமளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அப்படிப்பட்ட ஒரு சிறப்பான இரவில், ஒரு சிறந்த வீரனை டேக் செய்ய நாங்கள் ஒருபோதும் தவறவில்லை, 2012 வெற்றியின் கதாநாயகன் நீங்கள்தான் எனக் குறிப்பிட்டுள்ளது.