விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சினைக்கு உண்மையான காரணம் யார்? – கிஷோர் கே சுவாமி!

நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் உரிமைக்குரல் விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி அவர்கள், விஸ்வரூபம் திரைப்படத்தின் சர்ச்சைக்கு உண்மையான காரணம் யார் என்பதனைப் பற்றி பேசியிருக்கிறார். அவரது கருத்துக்கள் பின்வருமாறு உள்ளன.

கிஷோர் கே சுவாமி :

ஏன் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு பிரச்சினை வந்தது என்றால், 2012ஆம் ஆண்டு செப்டம்பரில் இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லீம் என்கிற திரைப்படம் ஒன்று வெளியானது. இது அமெரிக்கத் திரைப்படம். அத்திரைப்படத்தினை எதிர்த்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. அமெரிக்க அரசிடம் இருந்தே எச்சரிக்கை கடிதம் வந்தது. அதனால் தான் இன்று வரை அண்ணா மேம்பாலத்தில் போலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  இந்த விஸ்வரூபம் திரைப்படம் குறித்தான சர்ச்சையை இசுலாமிய இயக்கத்தினர் 2012 நவம்பரில் எடுத்து முன்வைக்கிறார்கள். ஒரு முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் சட்ட ஒழுங்கிற்கு பிரச்சினை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இல்லையென்பதை முதலில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அவரிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை. இசுலாமிய அமைப்பினர் இந்தத் திரைப்படத்தை முதலில் நாங்கள் பார்ப்போம் பிறகு வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் கமலஹாசன் தரப்பு பார்க்க விடமாட்டேன் என்றார். எனவே அவர்கள் திரையரங்கில் திரையிட முடியாதபடி செய்துவிடுவோம் என்றார்கள்.

இப்படி இருக்க முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்ன செய்யவேண்டும். முதலமைச்சர் நிர்வாக ரீதியாகத்தான் தலையிட முடியுமே தவிர இதுபோன்ற விவகாரங்களில் தலையிட முடியாது. அதையும் கடந்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வழிவகை செய்தார். பிறகு முதலமைச்சரை சந்திக்கிறார். அடுத்த ஆண்டு அதாவது 2013 ஜனவரி 25ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது. ஆனால் கமல் தற்போது, அன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் வேடிக்கைப் பார்த்தார் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இப்படி மனசாட்சியைப் புதைத்துவிட்டு பேசியுள்ளார். மேலும் அன்றைக்கு ஜெயலலிதா அவர்களின் மேற்பார்வையில் இருந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சென்று பட்டிமன்ற நடுவராக அமர்ந்துள்ளார். ஆனால் இன்றைக்கு கமல் இப்படி பேசியிருப்பது அயோக்கித்தனமான குற்றச்சாட்டாக நான் பார்க்கிறேன் என்று தனது வாதத்தையும் கருத்தினையும் முன்வைத்தார் கிஷோர் கே சுவாமி.

(முற்றும்)

 

நாயகன் அடிபணிந்தார் எட்டுத்திக்கும் சிரிப்புத்தானே.. திமுகவிடம் அடிபணிந்த கமல்!

கிஷோர் கே சுவாமி கருத்துக்களின் முதல் பகுதி கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. சொடுக்கவும்!

https://newsj.tv/kishore-k-swamy-about-kamal-haasan/ ‎

Exit mobile version