வேரிலே வெந்நீர் ஊற்றிவிட்டு கிளையிலே பன்னீர் தெளிக்கும் திமுக – அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி!

நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் உரிமைக்குரல் நிகழ்ச்சியின் வாயிலாக உரையாடிய அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி உரையின் சுருக்கம் பின்வருமாறு உள்ளது.

கிஷோர் கே சுவாமி (அரசியல் விமர்சகர்)

1971 72 காலக்கட்டத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு வாபஸ் வாங்கப்பட்டது. அப்போது கொட்டும் மழையில் கருணாநிதி வீடு சென்று இராஜாஜி அவர்கள், மதுவிலக்கு வாபாஸ் பெறவேண்டாம் என்று சொல்லியுள்ளார். சந்தித்து பேசி முடித்து வெளியே வந்தவுடன் இராஜாஜி  பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். ஆனால் பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாநிதி, இராஜாஜி தன்னுடைய பேரனுக்கு வேலை வேண்டும் என்று கேட்டு வந்தார் என்று சொன்னார். இதற்கு இராஜாஜி பதில் கொடுக்கவில்லை ஆனால், கர்மவீரர் காமராசர் அவர்கள் தக்க பதில் ஒன்று அன்றைய காலக்கட்டத்தில் கொடுத்தார். “இராஜாஜி உதவிக்காக படியேற தயங்கமாட்டார்தான், ஆனால் ஒருபோது சுயநலத்துக்காக அவர் அதை செய்யக்கூடியவரில்லை” என்று காமராசர் கூறினார்.

திமுக ஆட்சியில் இருந்து விலகுவதற்கு முன்னர்  அவசர கோலத்தில் மதுவிலக்கினைக் கொண்டுவந்தார். ஒரு விசயத்தை ஒரே இரவில் மாற்றியமைக்க முடியாது. குறிப்பாக டாஸ்மாக் விசயத்தில் கருணாநிதி மதுவிலக்கு என்று அறிவித்தது அரசியல் காரணுங்களுக்காக மட்டுமே. புரட்சித் தலைவர் ஆட்சியில் மீண்டும் மது அமலுக்கு வந்தது. மது விலக்கு விலக்கப்பட்டதற்கு அண்டை மாநிலங்களில் மது கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும்போது அதனை விலக்க முடியாது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்கட்டும் 1989ல் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறார். பாக்கெட் சாராயத்தைக் கொண்டுவந்தார். வேரிலே வெந்நீரை ஊற்றிவிட்டு கிளைக்கு பன்னீர் தெளிக்கும் வேலையை திமுக கணக்கச்சிதமாக செய்யும். 1989 அக் 2 ல், நாங்கள் காந்தியின் கொள்கையைப் பின்பற்றும் விதமாக மதுஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்துவோம் என்று கருணாநிதி கூறினார். அந்த இயக்கம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. 91ல் புரட்சித் தலைவி மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணம். மலிவு விலை சாராயத்தை ஒழிப்பேன் என்று சொல்லி அதை நிறைவேற்றியதுதான். இப்படி ஒருபுறம் இருக்க, மனசாட்சியுடன் செந்தில்பாலாஜியிடம் கேட்கிறேன். தமிழகத்தில் உள்ள 18 மதுபான ஆலைகளில், 10 ஆலைகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

மேலும் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி பேசியவையின் முழு விபரங்கள் கீழுள்ள காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது. சுட்டியைச் சொடுக்கவும்!

Exit mobile version