பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற உரிமைக்குரல் நிகழ்ச்சியானது  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை ஒட்டி அதிமுகவிற்குப் பெருகும் ஆதரவினைப்  பார்த்து பயந்து பதுங்கிவிட்டதா திமுக கூட்டணி என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாத அரங்கில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமியும் கலந்துகொண்டிருந்தார். அவரிடம் ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்கப் போகும் அமைச்சர்களுக்கே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே? என்னதான் நடக்கிறது அங்கே? என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பின்வருமாறு அவர் பதிலளித்தார்.

இந்த ஈரோடு தேர்தல் களமானது அதிமுக vs திமுக என்று தான் மாறியிருக்கிறது. குறிப்பாக திமுக அவர்களின் கட்சியினைச் சேர்ந்த, கிட்டத்தட்ட 32 மாவட்டச் செயலாளர்களையும் 13 அமைச்சர்களையும் களத்தில் இறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸில் 9 எம்பிக்கள் உள்ளனர். அவற்றில் எத்தனைபேர் பிரச்சாரம் செய்துள்ளார்கள் என்பது கேள்வியே? அதேபோல காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது எத்தனை காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பதும் கேள்வியே?. ஆனால் திமுக தொண்டர்கள் அதிகமானோர் உடன் இருந்தார்கள். திமுகதான் முனைப்பு காட்டுகிறது.

இந்தப் பக்கம் பார்த்தால் ஒரு கள ஆய்வினை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து செய்கிறார். கண்ணுக்கு எட்டிய வரை இரட்டை இலை சின்னம் தாங்கிய பதாகைகளும் கொடிகளும்தான் உள்ளது. அதற்கு காரணம் 1996 தேர்தலில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் அமைத்துக் கொடுத்த வியூகம்தான். தேர்தல் என்று வந்துவிட்டால் களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டு. எப்போது தேர்தல் அறிவித்தாலும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கும் முதல் கட்சியாக இருப்பது அதிமுகதான். எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு சென்று மேற்பார்வையிடுகிறார். மேலும் பொதுமக்களும் அவரை எளிதில் அணுக முடிகிறது. தொண்டர்களும் தலைவர் நம்முடன் நிற்கிறார் என்பதனை மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள்.

கழகத் தொண்டனுக்கு தேர்தல் என்பது ஒரு திருவிழா. அதுவும் இடைத்தேர்தல் என்பது பல மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய தொண்டர்கள் இடைத்தேர்தல் தொகுதியின் தொண்டர்களுடன் உறவாடுவதும், அவர்களுக்குள் நட்பு விஸ்தரிக்கவும், கட்சிக்கு பலமாகவும் அமைவதாக இருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே தேர்தல் என்றால் தொண்டர்களுக்கு திருவிழாதான். அதிமுக இப்படி விழா கோலம் பொல இருக்க காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை பத்து மணிக்கு வீட்டிலிருந்து கிளப்புவதே பாடாவதியாக உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஸ் பிரச்சாரம் செய்யும்போது கூட உடன் இளங்கோவன் இல்லை. அதற்கு பதில் அவருடைய மகனுக்கு இளங்கோவன்போல மேக்கப் போட்டு நிறுத்தியுள்ளார்கள். பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. அதாவது உங்களது வேட்பாளரே தோய்ந்து போய் விட்டார் என்பதுதான் இதற்கு பொருள். அவரைப் பொறுத்தவரைக்கு இவர்கள் சொல்லி நாம் என்ன செய்வது என்ற தொணியிலேயே இருப்பார். அதனால் தான் சொல்கிறேன் களப் பணியில் அதிமுகதான் சிறந்தது. இந்த இடைத்தெர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு கிஷார் கே.சாமி விவாத அரங்கில் தனது கருத்தினை முன்வைத்தார்.

Exit mobile version