புத்தாண்டை முதலில் கொண்டாடும் கிரிபாடி தீவு

2020ம் ஆண்டு புத்தாண்டு முதன்முதலில் கிரிபாடி என்ற தீவில் கொண்டாடப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4. 15க்கு புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

2020 புத்தாண்டு ஏற்கனவே பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வருகின்றன. அந்த வகையில் புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடாக மத்திய பசிபிக் கடலில் உள்ள கிரிபாடி தீவு உள்ளது. வாண வேடிக்கையுடன் உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணி 15 நிமிடங்களுக்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதேபோல புத்தாண்டு கடைசியாக பிறக்கும் நாடாக அமெரிக்காவின் அருகில் பசிபிக் கடலில் உள்ள பகேர் தீவு உள்ளது.  இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணி 15 நிமிடங்களுக்கு பிறக்கிறது.

Exit mobile version