தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின்போது கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக, முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையைத் தமிழகத்தில் அமைக்கத் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், கிங்ஸ் மருத்துவமனைக் கிளையை அமைப்பதற்கான இடத் தேர்வு பணிகளுக்காக கிங்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் தமிழகம் வந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஸ் ஆகியோரைச் சந்தித்தனர். தமிழக சுகாதாரத் துறை சார்பில் லண்டனில் மொத்தமாக 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது குறிப்பிடத் தகுந்தது.