கோடை காலத்தில் இருந்து தப்பிக்க மன்னர் திப்பு சுல்தான் யுக்தி

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலங்களில் மக்கள் அவதிப்படும் சூழலில் மன்னர்களை தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். கோடை வெயில் காலங்களில் தேக்கினால் ஆன அரண்மனையை அமைத்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி ஓய்வெடுத்துள்ளார் திப்பு சுல்தான். கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நாம் எத்தனையோ
யுக்திகளை கையாள்கிறோம். ஆனால் மன்னர்கள் கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து எப்படி தங்களை காத்து கொண்டார்கள் என்றால், அது சுவாரஸ்மான ஒரு விஷயம்.

கோடைகால வெப்பத்தை தவிர்க்க திப்பு சுல்தான் தனியாக ஓர் அரண்மனையை அமைத்திருந்தார். கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி நதிகரையோரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீரங்கபட்ணா என்ற அரண்மனை. ஸ்ரீரங்கபட்ணா அரண்மையில் தனது கோடை காலங்களை மன்னர் திப்பு சுல்தான் கழித்துள்ளார். இந்த கோடைகால அரண்மனை இந்திய,இஸ்லாமிய கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டது.

வெப்பத்தை தவிர்ப்பதற்காக இந்த அரண்மனை முழுவதும் தேக்கு மரத்தால் கட்டப்பட்டுள்ளது. அரண்மனையின் சுவர்கள் கேன்வாஸ் பெயிண்டிங் ஆல் திட்டப்பட்டு போர் யுக்திகளையும் பறைசாற்றுகிறது.

Exit mobile version