மெக்சிகோவை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனான எல் சாப்போவிற்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது
மெக்சிகோவை சேர்ந்தவர் போதைப்பொருள் கடத்தல்காரரான எல் சாப்போ. இவரது இயர் பெயர் ஜோகின் குஸ்மேன். அமெரிக்கா முழுவதும் கொக்கைன், ஹெராயின் உள்பட அனைத்து வகையான போதைப்பொருட்கள் விற்பனையிலும் கடத்தலிலும் எல் சாப்போ ஈடுபட்டு வந்தார். இந்த குற்றங்கள் தொடர்பாக அவர் சிறையில் அடைக்கப்பட்டபோதும் அங்கிருந்து எளிதாக தப்பிய எல் சாப்போ கடந்த 2016ம் ஆண்டு கடும் போராட்டத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு நியூயார்கில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. எல் சாப்போ மீதான குற்றங்க்ள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயுதங்களை பயன்படுத்தியதற்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது