கர்நாடக மாநிலத்தில் வீட்டினுள் புகுந்த அரிய வகை ராஜநாகத்தை பிடித்த வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்குள் கொண்டுவிட்டனர்.
ஷிவமோகா மாவட்டம், மண்டகாடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினுள் கொடிய விஷம் கொண்ட 11 அடி ராஜநாகம் ஒன்று புகுந்தது. அதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து உயிர்பயத்தில் வெளியில் ஓடினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கப்பக்கத்தினர் அங்கு அதிகளவில் கூடினர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்குவந்த வனத்துறையினர் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் பாம்பு சீறியது. இதையடுத்து, பாம்பாட்டி ஒருவரின் உதவியுடன் பாம்பை பிடித்து, அதை வனத்துறையினர் காட்டிற்குள் கொண்டு விட்டனர்.பிடிபட்ட ராஜ நாகம் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றும் இந்த பாம்பை பிடிப்பது கடினமான பணி என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.