ரயிலில் பயணித்த ராஜநாகம் : வைரல் வீடியோ

ரயிலில் பயணித்த 10 அடி ராஜநாகத்தை வனத்துறையினர்கள் மீட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மனிதர்களின் அன்றாட வாழ்வில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திருக்கு பயணம் செய்ய பைக், கார், பஸ், ரயில், விமானம் என பல வகை வாகனங்கள் உள்ளன. ஆனால் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே மக்கள் சவுகரியமாக எண்ணுகின்றனர். மக்கள் மட்டுமின்றி உயிரினங்களும் ரயிலில் பயணம் செய்கின்றது, சமீபத்தில் ரயிலில் எலிகள் தொல்லை அதிகம் உள்ளது என பல கோடி செலவு செய்து அவற்றை அகற்றியது அரசு, இதற்கு அடுத்ததாக ரயிலில் பாம்பு குடி கொண்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து வந்த ரயிலின் படிக்கு கீழ் 10 அடி கொண்ட ராஜ நாகம் சுருண்டு இருந்துள்ளது. இதனை கண்டு பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் ராஜ நாகத்தை மீட்டனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version