கரூர் மாவட்டம் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தில் துவங்கிய மழலையர் வகுப்புகளை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யா மணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகே கடந்த 1981ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இந்தப் பள்ளியை சீரமைத்து மழலையர் வகுப்புகள் துவங்க, பொய்யா மணி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி, பள்ளியை புதுப்பித்து மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்தப் பள்ளியை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் துவக்கி வைத்து, ஆசிரியர்களின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.