சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 85 கோடி மக்கள்!!

உலகளவில் சுமார் 85 கோடி பேருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.ஆண்டுதோறும் மார்ச் 12ம் தேதி உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுநீரக தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்மை காலங்களில் சிறுநீரகம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முறையான உணவு பழக்கங்கள், இளம்வயதில் ஏற்படும் மன உளைச்சல் போன்ற காரணங்களால் சுமார் 85 கோடி பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.சிறுநீரகத்துக்காக ஒரு லட்சம் பேர் காத்திருக்கும் நிலை உருவாகி இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். 

மேலும், சிறுநீரகம் பாதித்தால் டையாலிஸிஸ், மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு எனவும் கூறினார்.முறையான உணவு, உயரத்துக்கேற்ற உடல் எடை, தினம்தோறும் உடற்பயிற்சி போன்றவைகள் கடைபிடிப்பதன் மூலம் சிறுநீரகம் பாதிப்பை தவிர்க்கலாம் என சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.சிறுநீரக செயலிழப்புக்கு அதிகம் பேர் ஆளாகியிருப்பதாக கூறிய சிறுநீரக துறை மூத்த பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், உடல் உறுப்பு தானத்திற்காக பல பேர் காத்திருப்பதாக கூறினார்.

வருடத்திற்கு ஒரு முறை சிறுநீரகம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என கூறிய சிறுநீரக துறை மூத்த பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், இந்தியாவிலேயே தமிழக அரசு தான், இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து வருவதாக கூறினார்.

Exit mobile version