திருச்சியில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் சாம்பியன் ஷிப் போட்டியில் வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
திருச்சி உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 220 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றனர். 7 முதல் 40 வயது வரை 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்க பொது செயலாளர் விக்டர் குழந்தை ராஜ், துணை தலைவர் சண்முகம், பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.