பிரபல நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவு செய்தார்.பின்பு அதற்கு மன்னிப்பும் கேட்டார்.
நடிகை குஷ்பூ நடிப்பு மற்றும் அரசியல் துறையிலும் நன்கு பிரபலமானவர். குஷ்பூ அவருடைய தோழி சுஜாதா விஜயக்குமாருடன் லண்டன் சென்றார்.அப்போது அங்குள்ள ஷாப்பிங் கடைக்கு சென்றார்.அப்போது, ஒரு மொபைல் கடையில் Phone Back cover குஷ்பூ கண்ணில் பட்டதும் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்று தோற்றமளிக்கும் படம் இருந்திருக்கிறது. அந்தப் படத்தை படம் பிடித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குஷ்பூ. “லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு ஸ்டிரிட்டில் உள்ள ஒரு கிஃப்ட் ஷாப்பில் உள்ள நான் கண்டதை நீங்களும் பாருங்கள். அவர் வெரி ஓன் சூப்பர் ஸ்டார்” என பதிவு செய்து ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவையும் டேக் செய்து இருந்தார்.
அதன் பிறகு, அந்த நபர் கத்தாரின் மன்னன் தமிம் பின் அகமது என்று தெரிய வந்தது.இதை பார்த்த பார்வையாளர்கள், குஷ்புவின் தவறை சுட்டிக் காட்டினார்கள். பிறகு குஷ்புவின் தவறை பலரும் சுட்டிக் காட்டினர்,
அதற்கு பதில் அளித்த குஷ்பூ என்னுடைய தவறை சுட்டிக் காட்டியதுர்க்கு நன்றி. Flip cover-ல் இருப்பவர் எங்களுக்கு சூப்பர் ஸ்டார் தான். அதோடு அந்தக் கடையில் இருந்த நபரும் அப்படித்தான் எங்களுடம் சொன்னார்.
சரி… அது நம்முடைய சூப்பர் ஸ்டார் இல்லை. என் தவறை திருத்திய எனது நல்ல நண்பர்களுக்கு நன்றி. தவறை ஏற்றுக்கொள்வது நீங்கள் வளரத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது, நானும் அப்படித்தான்.. தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுதல், மனிதநேயம்”
என்ற விளக்கமும் ட்விட்டரில் பதிவிட்டுதற்க்கு அதற்கான மன்னிப்பும் கேட்கிறேன் என்று நடிகை குஷ்பூ பதிவு செய்தார்.