கஜா புயல் காரணமாக பெய்த கனமழையால், திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார அணைகளில், ஒரே நாளில் முப்பது அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயல் காரணமாக கனமழை பெய்தது. இதன்காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வரதமாநதி அணைக்கு, வினாடிக்கு 8ஆயிரம் கனஅடி நீர் வருகிறது. இதன் மூலம் அணையின் நீர்மட்டம் மூன்று மணி நேரத்தில் 17 அடி உயர்ந்து, மொத்த கொள்ளவான 66.47 அடியை தாண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.