பழனி வந்த கேரள பெண் பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான புகாரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
கேரளாவைச் சேர்ந்த 40வயது பெண் ஒருவர் பழனி வந்த போது, 3 பேர் கொண்ட கும்பலால் தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கூட்டு பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், குற்றம் நடந்ததாக கூறப்படும் பழனி மலை அடிவார பகுதியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் திண்டுக்கல் எஸ்பி நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அடுத்த கட்டமாக, கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், விசாரணைக்காக 3 தனிப்படைகள் நியமக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.