கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கேரள கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கேரளாவில் இருந்து கம்பம் மெட்டு வழியாக ரசாயண கழிவுகள், காலாவதியான உரக்கழிவுகள், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை இரவு நேரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளை உண்ணும் வனவிலங்குகள், பறவைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதால், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.