பருவமழை பொய்த்து, கேரளாவின் முக்கிய அணைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் அதிக அளவு லாபம் ஈட்டும் நிறுவனமாக ஹைடேல் சுற்றுலாத்துறை விளங்கி வருகிறது. இடுக்கி மற்றும் மூணாறு பகுதிகளில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளான மாட்டுப்பட்டி ,குண்டளை ,செங்குளம், ஆகிய அணைக்கட்டுகளில், படகு சவாரி மூலம் தினந்தோறும் 30 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை சுற்றுலா துறைக்கு வருமானம் கிடைத்து வந்தது .
இந்நிலையில் மூணாறில் பருவமழை ஏமாற்றியதன் காரணமாக குறிப்பிட்ட அணைகள் வறண்டு வருகிறது. இதன் காரணமாக மூணாறில் உள்ள முக்கிய அணைகளில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மூணாறுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், கேரளா சுற்றுலா துறை கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.