சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது.
சீனாவில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 170க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், சுமார் ஏழாயிரத்து 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் உஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேரள மாணவர், அண்மையில் சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.