கேரளாவில் தென்மேற்கு பருவமழை 43 சதவீதம் குறைவு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 43 சதவீதம் குறைந்துள்ளதால் அணைகளின் நீர் மட்டம் குறைந்துள்ளது.

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். இவ்வருடம் தாமதமாக ஜூன் 8 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. ஆனால் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே மழையின் தீவிரம் குறைய தொடங்கியது.

திருவனந்தபுரம், கொல்லம் உட்பட தென்மாவட்டங்களில் குறைவான மழை பெய்தது. இதன் காரணமாக இடுக்கி, முல்லைப் பெரியாறு உட்பட பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version