மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பு – முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. வை தகுதிநீக்கம் செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. வை தகுதிநீக்கம் செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள சட்டபேரவைக்கு 2016-ம் ஆண்டு பொதுத் தேர்தால் நடைபெற்றது. ஆழிக்கோடு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கே.எம்.ஷாஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் நிக்கேஷ் குமாரைவிட கூடுதலாக 2 ஆயிரத்து 287 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் நிக்கேஷ் குமார் வழக்கு தொடர்ந்தார்.

அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய வகையில், “முஸ்லிமல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்” என துண்டு பிரசுரங்களை வெளியிட்டு, மக்களிடையே பிரிவினையை ஷாஜி ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ராஜன், ஷாஜியை ஆறு ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version