கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் ஆகியோரை, 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் அண்மையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க NIA நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கொச்சி என்ஐஏ நீதிமன்றம், இருவரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.