கேரளாவில் வெள்ள பேரிடருக்கு பலியானோர் எண்ணிக்கை 114 ஆக உயர்வு

கேரளாவில் பெய்த கனமழையால் மாநிலத்தில் உள்ள 39 நீர்த் தேக்கங்களில் 35 அணைகளும் முழுகொள்ளளவை எட்டியதால் நீர் திறக்கப்பட்டது. இதனால் வரலாறு காணாத பேரழிவை கேரளா சந்தித்து வருகிறது. அனைத்து போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக 1,067 முகாம்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஏற்படும் நிலச்சரிவும் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. திரிச்சூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிருடன் புதைந்தனர். பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். கனமழை வெள்ள பேரிடருக்கு பலியானோரின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மீட்பு பணிகளுக்காக கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Exit mobile version