பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கேரள சட்டசபை இன்று கூடுகிறது.
கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலையில் பெண்கள் அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. அம்மாநில ஆளுநர் சதாசிவம் கூட்டத் தொடரை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். 31ம் தேதி பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 7-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கும் எனத் தெரிகிறது.