அதிகப்படியான நுரையுடன் காணப்படும் கெலவரப்பள்ளி அணை நீர்

கர்நாடகாவிலிருந்து அதிகப்படியான நுரையுடன் கெலவரப்பள்ளி அணைக்கு ஆயிரத்து 306 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு 3வது நாளாக நீர் வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் வெளியேற்றப்படும் ஆயிரத்து 306 கனஅடி நீரில் கர்நாடக தனியார் தொழிற்சாலைகளின் கழிவுநீரும் சேர்ந்து வெளியேற்றப்படுவதால் அதிகப்படியான நுரையுடன் தென்பெண்ணை ஆற்று நீர் காணப்படுகிறது.

தொழிற்சாலை ரசாயன கழிவு நீர் தென்பெண்னை ஆறு மூலம் தமிழகத்திற்குள் கலந்து வருகிறது. இவ்வாறு ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரை சுத்திகரித்த பின்னர் தான் வெளியேற்ற வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Exit mobile version