டிரம்ப் மகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பங்கேற்க தடையில்லை : அமெரிக்க தூதரகம்

டெல்லி மோதிபாக் பள்ளியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா பங்கேற்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்க எந்த தடையும் இல்லை என அமெரிக்க தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா, நாளை மோதிபாக்கில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் உரையாடுகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கான பட்டியலில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியோ ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இவாங்கா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியோ ஆகியோர் பங்கேற்க எந்த தடையும் இல்லை என்றும், அது அரசியல் நிகழ்ச்சி இல்லை எனவும் அமெரிக்க தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. மாணவர்களின் கல்வியை மையப்படுத்தியே அந்நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version