மழையை எங்கள் நாட்டுக்கு போ… வைரலாகும் கேதர் ஜாதவ்-வின் வீடியோ…

2019ஆம் ஆண்டு உலககோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சில ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மான்செஸ்டரில் நாளை நடைபெறுகிறது. அனல் பறக்க இருக்கும் இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் கடவுளிடம் வித்தியாசமாக பிரார்த்தனை ஒன்றை வைத்துள்ளார். அவர், “மழையே” போ.. போ.. எங்க நாட்டுக்கு போ..! கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்… மழையில்லாமல் எங்கள் மஹாராஷ்டிரா வறண்டு கிடக்கிறது… மழையே நீ அங்கே போ…” என்று வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Exit mobile version