இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம் நிறுவனம்

கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்க இருப்பதாக கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பைக் உரிமையாளர்கள் மற்றும் பைக் பிரியர்களை ஒன்றிணைத்து கொண்டாடும் நிகழ்வாக இந்திய பைக் வீக் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக கோவாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்திய பைக் வீக் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஆண்டுக்கு ஆண்டு இந்த பைக் திருவிழாவில் கலந்து கொள்ளும் உரிமையாளர்கள் மற்றும் பைக் பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திய பைக் வீக் திருவிழா அடுத்த மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவாவில் நடக்கிறது.

இந்த திருவிழாவில் பல முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில், கேடிஎம் நிறுவனமும் இந்த திருவிழாவில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பிற நிறுவனங்களைவிட இந்திய பைக் வீக் திருவிழாவில் கேடிஎம் பங்கேற்க இருப்பதாக கூறியிருப்பது பைக் பிரியர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது

Exit mobile version