kawasaki நிறுவனத்தின் புதிய பைக் அறிமுகம்…!

உலக அளவில் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள kawasaki நிறுவனம் புதிய 1,000 cc ஹைப்பர் பைக் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஜப்பானை சேர்ந்த kawasaki நிறுவனம் விரைவில் புதிய 1,000 cc நேக்கட் ரக ஹைப்பர் பைக் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. டீசர் மூலமாக இந்த புதிய பைக்கின் வருகையை உறுதி செய்துள்ளது.

kawasaki நிறுவனத்தின் நேக்கட் ரக மாடல்கள் Z என்ற வரிசையில் விற்பனை செய்யப்படவுள்ளது.அந்த வகையில், இந்த புதிய பைக் மாடல் Z1000 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு இறுதியில் தனது தாயகமான ஜப்பானில் நடைபெற இருக்கும் டோக்கியோ ஆட்டோ ஷோவில் இந்த புதிய பைக்கை kawasaki நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் விளியாகியுள்ளது .

Exit mobile version