காவலன் செயலி ஆபத்து நேரங்களில் பயனுள்ளதாக இருக்கும்: ஏ.கே. விஸ்வநாதன்

காவலன் செயலியை கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் ஆபத்து நேரங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், காவலன் செயலியை தங்களது கைபேசியில் வைத்துக்கொண்டால் பிரச்சனையின் போது ஆபத்தில் இருந்து மீட்க உதவும் என்று கூறினார். மென்பொருள் நிறுவன ஊழியர் லாவண்யா என்பவர் பாதிக்கப்பட்ட போது, காவலன் செயலி மூலம் உடனடியாக உதவ முடிந்ததை நினைவுகூர்ந்த அவர், காவலன் செயலி குறித்து தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவும் வலியுறுத்தினார். முன்னதாக காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை காவல்துறையினர் வழங்கினர். இதில், தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேமானந் சிங்ஹா, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version