ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்தான நிலையில், சென்னை காசிமேட்டில் நோய் தொற்று அபாயத்தை மறந்த பொதுமக்கள் மீன் வாங்குவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினர்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வீரியத்துடன் பரவி வரும் நிலையில், நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்கனவே அமலில் இருந்து ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் புரிந்து கொள்ள பொதுமக்கள் மீண்டும் சந்தைகளில் கூட்டம், கூட்டமாக குவியத் தொடங்கியுள்ளனர். சென்னை காசிமேட்டில், கொரோனா தொற்றை பற்றி துளியும் கவலைப்படாமல் மீன்கள் வாங்க பொதுமக்கள் வரிசை கட்டி நின்றனர். சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பபற்றாமல் மீன் வாங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு எதிரொலியால், நெல்லை டவுன் மேலவீதி, வடக்கு ரத வீதிகளில் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக திரண்டுள்ளனர். அடிக்கடி கடைக்கு செல்வதை தவிர்க்க, பொதுமக்கள் மொத்தமாக காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். பல்வேறு கடைகளில் வாட்ஸ் அப் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்.