காசிமேடு கடற்கரையில் சிக்கி உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை

சென்னை காசிமேடு கடற்கரை அலையில் சிக்கி உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடி துறைமுகம் அருகேயுள்ள கடற்கரையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக பொதுமக்கள் அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜேக்கப் ஜெயகுமார் என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பிரிவில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version