மத்திய அரசின் நடவடிக்கையால் அடுத்த 5 ஆண்டுகளில் காஷ்மீர் அசுர வளர்ச்சி அடையும் என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து மசோதா மீதான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமித் ஷா பதிலளித்தார். அப்போது, மத்திய அரசின் இந்த முடிவால் ஜம்மு காஷ்மீர் மக்களின் துன்பங்கள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், அதன் பின்னரே மத்திய அரசின் நடவடிக்கையால் ஏற்பட்ட நன்மையை எதிர்க்கட்சியினர் உணருவார்கள் என்றார். காங்கிரசை போல் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை என்று குறிப்பிட்ட அமித் ஷா, தேசத்தின் நன்மைக்காகவே 370-வது பிரிவு நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.