காஷ்மீர் தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த, டெல்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், தாக்குதலுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்ததாக கூறினார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு, மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.