காஷ்மீரை யுனியன் பிரதேசமாக பிரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை பிரித்து காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என அறிவித்தது. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னாள் ராணுவ செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான இந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல், ஓய்வுபெற்ற ஐ.சி.ஏ.எஸ். அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இந்த குழு மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கான எல்லை வரையறை ஆகியவை குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு உடனடியாக பணிகளை தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version