"நீதிகேட்டு போராடியவர்கள் மீது தடியடி"

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலட்சியத்தால் கரூர் அருகே டேங்கர் லாரி கிளீனர் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் கிடங்கு உள்ளது. இங்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த,செல்வமணி என்பவர் பெட்ரோல் பங்கிற்கு எரிபொருள் எடுத்துச் செல்வதற்காக, அவருடைய லாரியில் கிளீனராக வந்துள்ளார்.

இந்த நிலையில், திங்களன்று பிற்பகலில் அவருகு வலிப்பும் அதைத் தொடர்ந்து மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலிய நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும், அதை இயக்க ஓட்டுநர் இல்லை என்று கூறி அலட்சியம் காட்டியதால் செல்வமணி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 150க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் செல்வமணியின் உடலுடன் பெட்ரோலிய நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானமடையாத அவர்கள் 20 மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
உயிரிழப்புக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு, கடும் கண்டனம் எழுந்துள்ளது.

 

Exit mobile version