திமுகவில் இருந்து விலகிய கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இணைந்தார்

திமுகவில் இருந்து விலகிய கருப்பசாமி பாண்டியன், தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், திமுகவில் இருந்து விலகினார். இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். பின்னர், ஆதரவாளர்களுடன் கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இணைந்தார்.

Exit mobile version